• Mar 26 2026

'விடுதலை 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு.. சூரி, விஜய் சேதுபதி ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’விடுதலை’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது என்பது தெரிந்தது.

’விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதல் பாகத்தில் சூரி கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11.30 மணிக்கு வெளியாகும் என்று சூரி தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை வெளியாக உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு சூரி மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ், கௌதம் மேனன், ராஜீவ் மேனன், பாலாஜி சக்திவேல், இளவரசு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ’விடுதலை 2’ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.


Advertisement

Advertisement