• Sep 30 2023

ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து வரும் சினேகா- வைரலாகும் வீடியோ -வேற லெவலில் பண்றாங்களே

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ரசிகர்களால் புன்னகை இளவரசி என்று அழைக்கப்பட்டார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார். பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

பின்னர் 2009 ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.


திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் நடித்து வருகின்றார்.குறிப்பாக சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி வருகின்றார்.அண்மையில் ஷீ தமிழில் முடிவடைந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்குபற்றியிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது ஜம்மில் கடுமையான வொர்க்கவுட் செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement