• May 18 2024

சின்னக் குஷ்பூ இப்போ ஸ்லிம் குஷ்பூவாக மாறிட்டாங்களே... ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக பல சீரியல்கள் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

அதன் பின்னர் 2007-ஆம் ஆண்டு 'தேசமுத்துரு' என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அப்படத்திற்கு பிறகு ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார்.


அந்தவகையில் தமிழில் இவரின் முதல் படம் என்றால் அது தனுஷுடன் அவர் நடித்த 'மாப்பிள்ளை' படம் தான். அதனைத் தொடர்ந்து பல பட வாய்ப்புக்கள் இவரைத் தேடி இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமும் உருவாகத் தொடங்கி விட்டது.


படங்களில் மட்டுமல்லாது இன்ஸ்டா பக்கத்திலும் இவர் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருவார். அதில் அடிக்கடி தனது புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களினை பதிவேற்றம் செய்வது வழமை.


அந்தவகையில் இவர் தற்போதும் தனது புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார். அதில் இவர் தனது உடல் எடையை நன்றாக குறைத்து ஸ்லிம் ஆக மாறி விட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "ஏன் இப்படி நன்றாக மெலிந்து விட்டீர்கள்" எனக் கேள்வி கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement