• Jan 19 2025

’ரமணா’ லொகேஷனில் ‘எஸ்கே 23’.. 23 வருடங்களுக்கு பின் நடக்கும் மேஜிக்.. ஏஆர். முருகதாஸ் நெகிழ்ச்சி..!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் ஏராளமான பிளாக்பஸ்டர் படங்களை வழங்கிய ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், டாப் லீக் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆக்‌ஷன் படம் ஒன்று தயாராகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு, கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் இணைந்துள்ளார். அவர் ஏற்கனவே தென்னிந்தியா முழுவதும் இளைஞர்களின் இதயங்களை வென்ற ஒருவராக காணப்படுகிறார்.


ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் நிலையில், இதற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில், எஸ்கே படம் குறித்த அப்டேட் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.


குறித்த புகைப்படம், மறைந்த நடிகர் விஜயகாந்தை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய 'ரமணா' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு முக்கியமான காட்சியில், விஜயகாந்த் தனது பழைய மாணவர்களை சந்திப்பார். அந்த காட்சி எடுக்கப்பட்ட  ரயில் நிலையத்தில் தான் தற்போது முருகதாஸ் எஸ்கே படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார். 

மேலும் ஏ.ஆர். முருகதாஸ் பதிவில், 23 ஆண்டுகளுக்கு பிறகு SK உடன் SKxARM படப்பிடிப்பிற்காக எனது 'ரமணா' படத்தின் சின்னமான இடத்திற்குத் திரும்புகிறேன். எல்லாம் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் திரும்பியிருப்பது மிக யதார்த்தமாக உள்ளது என உணர்ச்சிவசமாக கூறியுள்ளார்.


Advertisement

Advertisement