• Apr 27 2024

ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் குக்வித்கோமாளி புகழ் சிவாங்கி-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற பிரபல நிழச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் சிவாங்கி. அதுமட்டுமல்லாது அவர் 'குக் வித் கோமாளி' ஷோவில் கோமாளியாகவும் கலக்கி வருகின்றார். இவருடைய நகைச்சுவை நிறைந்த பேச்சையும், அவரது குரலையும் ரசிப்பதற்கென்றே அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.

குக் வித் கோமாளி என்ற நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்குப் பின் 2021-ஆம் ஆண்டு பிளாக் ஷீப் டிஜிட்டல் விருது நிகழ்ச்சியில் சிறந்த பெண் பொழுதுபோக்கு நட்சத்திரத்திற்கான விருது, பிஹைண்ட் வுட்ஸ் கோல்டு ஐகான் நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பெண் நட்சத்திரத்திற்கான விருது, மற்றும் விஜய் தொலைக்காட்சி விருதுகள் நிகச்சியில் அஸ்வின்குமார் என்பவருடன் தொலைக்காட்சியில் பிரபலமான ஜோடிக்கான விருது எனப் பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.

அதுமட்டுமில்லாது இவர் தற்போது சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான 'டான்' என்ற திரைப்படத்தில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இதுவே இவரது முதல் படமுமாகும். அது மட்டுமல்லாது சிவாங்கி தனது முதல் திரைப்படப் பாடலாக 'பசங்க' என்னும் தமிழ் திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த 'அன்பாலே அழகாகும்' என்னும் பாடலை பாடி இருக்கின்றார்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சிப் பிரபலமான இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது ரசிகர்கள் இவரிடம் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றார். அத்தோடு போட்டோஷூட் செய்து அவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டும் வருவார். இதேபோன்று தற்போதும் இவர் தனது லேட்டஸ் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தமது லைக்ஸை அள்ளிக் குவித்து வருகின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement