• Apr 27 2024

புதிய படத்திற்காக மாஸ் லுக்கில் நிற்கும் சிவகார்த்திகேயன்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது. இதனை அடுத்து தற்பொழுது இவரது நடிப்பில் மாவீரன் , அயலான் ஆகிய திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது.


அயலான் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், மாவீரன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதியும் திரைக்கு வருகிறது.இதையடுத்து சிவகார்த்திகேயன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கப்போகிறார. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.


இப்படத்தில் நடிக்க நடிகை சாய்பல்லவி கமிட்டாகியுள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய 21 படத்திற்காக புதிய லுக்கில் மாஸ் காட்டி வருகிறார். தற்போது அவரின் புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement