• Apr 27 2024

வெளியான சிவகார்த்திகேயன் படப் பாடல்... படக்குழுவினர் செய்த அந்த விஷயம்... தவறை கண்டுபிடித்து வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பிலும் சரி, நகைச்சுவையிலும் சரி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் என்றால் அது நம்ம சிவகார்த்திகேயன் தான். இவர் நடிப்பில் உருவான படங்களில் பல படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அந்தவகையில் இவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் 'பிரின்ஸ்'. இப்படத்தினை ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அத்தோடு இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதிப் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் இப்படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகியான Maria Ryaboshapka என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு மென்மேலும் வலு சேர்க்கும் வகையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் உடைய முதல் பாடலான "பிம்பிளிக்கி பிளாப்பி..." நேற்று மாலை வெளிவந்தது. வெளியாகி சில மணி நேரங்களிற்குள்ளேயே பல ரசிகர்களை கவர்ந்து தற்போது யூடியூப்பில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


அந்தவகையில் இந்த லிரிகள் பாடல் வீடியோவின் தொடக்கத்தில் SK - Sivakarthikeyan என்பதற்கு பதிலாக Sivakathikeyan என்று போடப்பட்டுள்ளது. அதாவது Sivakarthikeyan பெயரியில் 'R' என்ற எழுத்தை மறந்து விட்டுள்ளனர். 

இந்த தவறைப் பார்த்த பலரும் "இந்த சின்ன விஷயத்தைக் கூடக் கவனிக்க மாட்டீர்களா" என்று கேட்டு கமெண்டுகளால் படக்குழுவை வெளுத்து வாங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement