• Apr 27 2024

'வீணா போனவன்...' விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்... பேச்சாலே பதிலடி கொடுத்த சிம்பு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் ஒரு வாரிசு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் பல சர்ச்சைகளையும் கடந்து இன்று தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. இவர் ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன்பிருந்தே குழந்தை நட்சத்திரமாக பல படங்களிலும் கலக்கி இருக்கின்றார்.


அந்தவகையில் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படமானது திரையரங்குகளில் வெளியாகிய நாளிலிருந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

அத்தோடு வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியாகி உள்ள இப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் பிரமாண்ட நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டு இருக்கிறது.


இவ்வாறாக இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வந்தாலும், ப்ளூ சட்டை மாறன் போன்ற ஒரு சில விமர்சகர்கள் இப்படத்தை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தனர். அதிலும் குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் "வீணா போனவன் டான் ஆன கதைனு சொல்லி விமர்சித்து இருந்தார்.


அதுமட்டுமல்லாது கவுதம் மேனன் படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள் "படம் பார்க்க வருபவர்கள் நன்றாகத் தூங்கிவிட்டு வாருங்கள்" எனக் கூறி இருந்தார். இதற்கு ப்ளூ சட்டை மாறன் "அவர் அப்படி சொல்லும் போதே கருகுற வாடை அடித்ததது" எனக் கிண்டலடித்து இருந்தார்.

அத்தோடு பிரபல இயக்குநரான கவுதம் மேனனை "வாய்ஸ் ஓவர் பைத்தியம்" என்றும் தரக்குறைவாக பேசி இருந்தார். இவரின் இந்த விமர்சனத்திற்கு நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் நேற்றைய தினம் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் பிரமாண்டமாக இடம்பெற்றது. இதில் முக்கிய பிரபலங்களான சிம்பு, இயக்குநர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உட்படப் பலரும் கலந்துகொண்டு ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தனர். 


அதாவது இயக்குநர் கவுதம் மேனன் பேசுகையில் "இன்னொருத்தர் பொழப்புல மண்ணு போடுறது தான் விமர்சனங்களா என நான் பலமுறை யோசித்தது உண்டு" எனக் கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து சிம்பு உருவகேலி குறித்து பேசினார்.

அதாவது "வெந்து தணிந்தது காடு படத்துல என்னோட உடம்ப வச்சு விமர்சகர்களால் எதுவும் எழுத முடியல. ஒரு படத்தை விமர்சனம் பண்ணலாம் அது தப்பில்லை, ஆனால் தனிப்பட்ட மனிதனையும், அவனுடைய உருவத்தையும் விமர்சனம் பண்றது மிகப்பெரிய தப்பு. என்னால இதை சிம்பிளாக எடுத்துக்க முடியும் ஆனால் நிறைய பேரால அப்படி எடுத்துக்க முடியாது" எனக் கூறியிருந்தார் சிம்பு. 


மேலும் "தனிப்பட்ட முறையில் யாரையும் துன்புறுத்த வேண்டாம். இதை நான் வேண்டுகோளாக வைச்சிக்கிறேன்" எனவும் ஒரு கோரிக்கையை முன் வைத்திருந்தார்.

இவ்வாறாக கவுதம் மேனனும், சிம்புவும் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளனர். இவர்கள் கூறிய இந்தக் கருத்தானது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement