• Apr 26 2024

‘அந்தகன்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு… லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட சிம்ரன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் அந்தாதுன்.இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கினை இயக்குநர் தியாகராஜன் செய்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரசாந்த் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு தமிழில் அந்தகன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.


இப்படத்தின் படப்பிடிப்பானது இறுதிகட்டத்தை எட்டியிருந்தது. ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார்.இந்த திரைப்படத்தில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்குவதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால், படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement