• Apr 27 2024

லோகேஷ் கனகராஜின் தங்கையா இவர்?.. திடீரென வைரலாகி வரும் பெண்ணின் புகைப்படம்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய  சினிமாவின் சென்சேஷன் இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் தளபதி 67ல் கமிட்டாகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு அறிவிப்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.நேற்று இப்படத்தில் நடிக்கும் பிரபலங்களின் அறிவிப்பு வந்த நிலையில் மீதமுள்ள நட்சத்திரங்களின் அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தங்கை இவர் தான் என்று கூறி பெண் ஒருவரின் புகைப்படம் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.அந்த பெண்ணின் பெயர் அவந்திகா கனகராஜ் என்பதினாலும், தளபதி 67 படத்தின் லோகேஷ் கனகராஜின் பதிவிற்கு, ரீ ட்விட் செய்ததாலும் ரசிகர்கள் அனைவரும் அவர் லோகேஷ் கனகராஜின் தங்கை என புரிந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், அவர் லோகேஷ் கனகராஜின் தங்கை இல்லை. அவர் ’தி ரூட்’ எனும் நிறுவதின் டேலண்ட் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .





Advertisement

Advertisement

Advertisement