• Apr 02 2025

நடிகை கூட இவ்வளவு ஸ்டைலா இருந்ததில்லை.. அஜித் மச்சினியின் அசத்தல் புகைப்படம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரி ஷாமிலியின் லேட்டஸ்ட் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு முன்னணி நடிகை கூட இவ்வளவு ஸ்டைலாக போஸ் கொடுத்ததில்லை போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

ஷாலினி போலவே ஷாம்லியும் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்தார் என்பதும் குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் உருவானஅஞ்சலிதிரைப்படத்தில் நடித்த அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதன் பின்னர் அவர் பல தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் சில படங்களில் நாயகியாகவும் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழில் விக்ரம் பிரபு நடித்தவீர சிவாஜிஎன்ற படத்திலும், சில தெலுங்கு, மலையாள படங்களிலும் அவர் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி தனக்கு விருப்பமான ஓவியம் வரைவதில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் அவர் வரையும் ஓவியங்கள் துபாய் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷாமிலிக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது அசத்தலான புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் சற்றுமுன் அவர் வெள்ளை காஸ்ட்யூமில் எடுத்த சூப்பர் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் முன்னணி நடிகைகள் கூட இவ்வளவு அழகாக போஸ் கொடுக்க முடியாது என்றும் நீங்கள் ஏன் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



Advertisement

Advertisement