• Mar 13 2026

சீயான் விக்ரமின் வீர தீர சூரன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்...!

shali / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 வது படமான வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி யூடியூப்பில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து உலகளவில் சாதனை படைத்துள்ளது.  இந்நிலையில் படக்குழு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.


வீர தீர சூரன் திரைப்படத்தின் ஷூட்டிங் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையே பகிர்ந்துள்ளனர். அதில் துப்பாக்கியுடன் விக்ரம், போலீஸ் உடையில் s.j சூர்யா  ஆகியோர் இருக்கும் புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளதால், ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.


Advertisement

Advertisement