• May 09 2024

வெளியானது சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கும்... 'ஜாக்சன் துரை' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

பி.வி.தரணி இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜாக்சன் துரை'. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதுமட்டுமல்லாது இவர்களுடன் பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் எனப் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

காமெடி கலந்த பேய் படமாக உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பை அளித்திருந்தனர். இப்படத்தின் முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. முதற் பாகத்தைப் போன்றே இரண்டாம் பாகத்திலும் சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கிறார்கள். 


அத்தோடு இதில் ஹீரோயினாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். அத்தோடு இவர்களுடன் இணைந்து சரத் ரவி, மணிஷா ஐயர், பாலாஜி, ரசிகா, யுவராஜ் கணேசன் ஆகியோரும் நடிக்கின்றனர். 

இந்நிலையில் 'ஜாக்சன் துரை 2' படத்தின் உடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சத்யராஜ் மாஸாக கண்ணாடி அணிந்திருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement