• May 19 2024

மெரூன் கலர் புடவையில் வேற லெவல் அழகில் ஜொலிக்கும் சார்பட்டா பரம்பரை திரைப்பட நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

2019 ஆம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை துஷாரா விஜயன். அறிமுகப்படமான இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

இது தவிர சில குறும்படங்களிலும் நடித்திருக்கின்றார்.இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் இவர் நடித்த மாரியம்மா என்ற கதாபாத்திரத்திரம் இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் துஷாரா விஜயன் நடித்து வருகிறார். படத்தின் பெயர் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

துஷாரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.மெரூன் கலர் புடவையில் எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் வேற லெவல் அழகில் இருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement