• May 19 2024

கணவருடன் இணைந்து ரொமாண்டிக் டான்ஸ் ஆடும் சரண்யா மோகன்... குவியும் லைக்ஸ்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரே சரண்யா மோகன். 'யாரடி நீ மோகினி' என்ற திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்து வந்த இவர் தன்னுடைய சேட்டையான கதாபாத்திரத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.


அப்படத்தினைத் தொடர்ந்து 'வேலாயுதம்' என்ற திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து மென்மேலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தினைப் பிடித்தார். தன்னுடைய திரைப்பயணத்தில் ஆரம்பத்தில், குழந்தை நட்சத்திரமாக தோன்றி நடித்து வந்த இவர் தன்னுடைய திறமையினால் ஒரு கட்டத்தில் ஹீரோயினாகும் அளவுக்கு முன்னேறினார்.


இவருடைய அழகான சிரிப்பும் குழந்தை முகம் மாறாத அழகும் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. இவ்வாறாக சினிமாவில் மேலும் பிரபலமாகி ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சரண்யா மோகன் திடீரென திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார். அதாவது அரவிந்த் கிருஷ்ணன் என்ற பல் மருத்துவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது இவர் தனது கணவனுடன் இணைந்து காதல் பாடல் ஒன்றிற்கு ரொமாண்டிக் டான்ஸ் ஆடி இருக்கின்றார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement