• Jan 19 2025

கணவரை விவாகரத்து செய்கிறேனா.. அதுதான் பவர் ஆஃப் மீடியா.. நடிகை சங்கீதா க்ரிஷ்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை சங்கீதா க்ரிஷ் தனது மாமியார் தன்னிடம் நீ என் பையனை விவாகரத்து செய்யப் போகிறாயா என்று கேட்டதாகவும் அதுதான் பவர் ஆஃப் மீடியா என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகைகளின் ஒருவர் சங்கீதா என்பதும் இவர் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் க்ரிஷ் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சங்கீதா தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் வதந்திகள் தோன்றும் என்பதும் சில வாரங்களாக சில முன்னணி பத்திரிகைகளிலே இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சங்கீதா க்ரிஷ் தன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி குறித்து மனந்திறந்து கூறினார். என்னுடைய மாமியார் தினமும் தங்களது வீட்டுக்கு வருவார் என்றும், நானும் என் கணவரும் அன்பாக இருப்பதை அவர் நேரில் பார்த்து ரசிப்பார் என்று கூறிய சங்கீதா திடீரென ஒரு நாள்நீ என் மகனை விவாகரத்து செய்யப் போகிறாயாஎன்று கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று கூறினார்.

எதற்காக இப்படி கேட்கிறீர்கள் என்று நான் கேட்டதற்கு ஒரு முன்னணி பத்திரிகையில் நீங்கள் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் வந்தது, அதை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்து கேட்கிறேன்என்று கூறியதாகவும் தெரிவித்தார். அதற்கு சங்கீதா எவனோ ஒருத்தன் கற்பனையாக எழுதுவதை நம்பி என்னுடைய மாமியாரே அதுவும் தினமும் எங்களை பார்த்து வரும் மாமியாரை கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றும் அதுதான் பவர் ஆஃப் மீடியா என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்

மேலும் எங்கள் இருவருக்கும் ஊடகங்கள் பலமுறை விவாகரத்து செய்து வைத்துவிட்டது என்றும் ஆனால் நாங்கள் கடைசி வரை பிரியப்போவதில்லை என்றும் நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

Advertisement

Advertisement