• May 08 2024

விஜய் தேவர் கொண்டாவைத் தொடர்ந்து பிரபல நடிகருடன் டேட்டிங் சென்ற சமந்தா- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா தற்போது, ஃபேமிலி மேன் 2, வெப் சீரிஸை தொடர்ந்து,  சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இது ஆங்கிலத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வரும் 'சிட்டாடல்' தொடரின் முன்னோட்டமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த வெப் சீரிஸை, ஃபேமிலி மேன் 2,  இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கி வருகிறார்கள். இந்த வெப் தொடரில், வருண் தவான் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் இவர்கள் இருவரும் பிரியங்கா சோப்ராவின் பெற்றோராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், சிட்டாடல் படப்பிடிப்பு தற்போது செர்பியாவில் நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகின்றது.


மேலும் இது தவிர நடிகை சமந்தா விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து குஷி என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படத்திலிருந்து அண்மையில் ஓர் பால் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. அத்தோடு இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்பட்ட நிலையில் சமந்தா விஜய் தேவர் கொண்டா நல்ல நண்பர் என்னும் அண்மையில் புகைப்படம் வெளியிட்டுத் தெரிவித்திருந்தார்.


இதனை அடுத்து தற்பொழுது வருண் தவானுடன் இவர் ஹொட்டல் ஒன்றில் சாப்பிட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது. மேலும் இந்தப் புகைப்படத்தில் சமந்தா ரொம்ப அழகாக இருப்பதாகவும் வருண் தவானுடனும் டேட்டிங்கா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement