• May 19 2024

இரவின் நிழல் திரைப்படம் பார்த்திபன் சொல்வது போல இல்லை- கடுமையாக விமர்சிக்கும் ப்ளு சட்டை மாறன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமாக சிந்திக்கக் கூடிய இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் பார்த்திபன். ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.

இவரது இயக்கத்தில் நேற்றைய தினம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் இரவின் நிழல். இப்படம் உலகத்திலே முதன்முறையாக Single Shot-ல் Nonlinear-ஆக எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனங்களை பெற்று வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். அந்த வகையில் முக்கிய பிரபலங்களின் படங்கள் வெளியானாலும் விமர்சித்து வரும் Blue Sattai மாறன் இந்தப் படத்தையும் குறித்து விமர்சித்துள்ளார்.

https://twitter.com/tamiltalkies/status/1548127586311884800

அந்த வகையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது பார்த்திபன் சொல்வது போல் இரவின் நிழல் திரைப்படம் உலகத்திலே முதன்முறையாக Single Shot-ல் எடுக்கப்பட்ட Nonlinear திரைப்படம் இல்லை.

அப்படி உலகத்திலே முதன்முறையாக எடுக்கப்பட்டது Fish & Cat 2013 என்ற இரானியன் திரைப்படம் தான், இதனை உலகின் மிகவும் பிரபலமான பத்திரிக்கை ஒன்றே ஒப்புக்கொண்டுள்ளது என இரவின் நிழல் திரைப்படம் குறித்த தனது குற்றச்சாட்டை Blue Sattai மாறன் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement