• May 18 2024

ஸ்ருதியை திருட்டுத் தனமாகக் கல்யாணம் பண்ணிய ரவி- அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் மீனா- எதிர்பாராத திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை சீரியல்

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பங்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.இந்த சீரியல் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலே டிஆர்பியிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனால் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

மேலும் சீரியலின் கதைப்படி தற்பொழுது முத்து இரண்டு நாட்கள் சவாரி இருக்கு என்று வெளியூருக்கு கிளம்பிப் போய் விட்டார். இதனால் மீனா முத்து எப்போது வருவார் என்று காத்திருக்கின்றார்.


மறுபுறம் ஸ்ருதி, ரவி தன்னை ஏமாற்றி விட்டதாக பொய் சொல்லி சீதாவின் கல்யாணத்திற்கு போவதாக போகின்றார். மேலும் ரவியும் ஸ்ருதியை கல்யாணம் பண்ணிக்க போற விஷயத்தைச் சொல்லாமல் இருக்கின்றார்.

இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியகியுள்ளது. அதாவது மீனா கோயிலுக்கு ரவியைத் தேடிப் போகின்றார். அப்போது ரவி ஸ்ருதியைக் கல்யாணம் பண்ணி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார். இருவரும் மாலையும் கையுமாக இருப்பதைப் பார்த்து என்ன செய்வது என்று யோசிக்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement