• Jul 09 2025

ரொம்ப வருத்தமா இருக்கு… – அகமதாபாத் விபத்தால் சோகமாக பதிலளித்த ரஜினி.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த கடுமையான விமான விபத்து, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரமுகர்கள் இந்த சம்பவத்துக்காக தங்களது இரங்கலையும், ஆதங்கத்தையும் தெரிவித்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனது உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார்.

ஒரு தனிப்பட்ட பயணத்திற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கு காத்திருந்த பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார். அகமதாபாத் விபத்து குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு சிறப்பாக பதிலளித்திருந்தார். 

அதன்போது ரஜினி, “ரொம்ப வருத்தமா இருக்கு… இப்படியொரு விபத்து நடந்தது. ஆண்டவனின் அருளால் இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நடக்காம இருக்கணும். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.” எனத் தெரிவித்திருந்தார். 


ரஜினிகாந்த் கூறிய இந்த வார்த்தைகள்,சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளன. ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரது மனிதநேயம் நிரம்பிய பதிலை வரவேற்கின்றனர். அத்துடன் இனிமேல் இப்படியான துயர சம்பவங்கள் இடம்பெறக்கூடாது எனவும் சிலர் தங்களது கருத்துகளை தெரிவிக்கின்றனர்.


Advertisement

Advertisement