• Apr 27 2024

கிரிக்கெட் பார்க்கப் போன ரஜினி.. அதுவும் 12 ஆண்டுகளுக்குப் பிறகா..? சூப்பர் ஸ்டாரை கண்டு அதிர்ந்த வான்கடே ஸ்டேடியம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில்  2-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா அணி வென்றது. 


இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய  அணி முதலில் பேட் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இந்த போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் அமைந்துள்ள வான்கடே மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். அவருடன் அவரது மனைவி லதாவும் சென்று இருந்தார். அங்கு சென்ற ரஜினிக்கு அமோக வரவேற்பு அளித்த மும்பை கிரிக்கெட் அசோசியேசன் தலைவர் அமோல் கலே, அவருடன் சேர்ந்து அப்போட்டியையும் கண்டுகளித்தார். 


ரஜினி குறிப்பாக 12 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement