• May 18 2024

உடலோடு ஒட்டிய உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி-ப்பா…என்ன ஒரு அழகு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராய் லட்சுமி.விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. இவர் அதன் பின்னர் பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து குண்டக்க மண்டக்க படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராய் லட்சுமி. இதன் பின்னர் பேரரசு, தர்மபுரி,நெஞ்சைத் தொடு உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக தோன்றியிருந்த ராய் லட்சுமி.

இதன் பின்னர் கன்னடம், தெலுங்கு, மலையாள என பல மொழிகளில் வாய்ப்புகளை தேடி சென்று விட்டார். 2011 ஆம் ஆண்டு லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படத்தில் பிரியாவாக நடித்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து அரண்மனை படத்தில் நடித்திருந்த ராய் லட்சுமி கடந்த ஆண்டு சிண்ட்ரெல்லா என்னும் திரில்லர் படத்தில் துளசி, அகிரா என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். அத்தோடு வினோ வெங்கடேஷ் என்பவர் எழுதி இயக்கி இருந்த இந்த படம் ஹாரர் மூவியாக வெளியாகி இருந்தது. இது சாக்ஷி அக்ரவால், உஜ்ஜயினி ராய், ரோபோ சங்கர் உளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தற்போது கன்னடத்தில் ஜான்சி ஐபிஎஸ், தெலுங்கில் ஆனந்த பைரவி, தமிழில் கேங்ஸ்டர் 21 உள்ளிட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ள ராய் லட்சுமி, தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றியுள்ளார். தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சின்னத்திரைகள் ரியாலிட்டியில் தோன்றியுள்ளார். அதோடு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் ராய் லட்சுமி.

இவ்வாறுஇருக்கையில் அவ்வப்போது பிகினி, கிளாமர் உடை உள்ளிட்டவற்றில் ரசிகர்களுக்கு காட்சியளிக்கும் ராய் லட்சுமி தற்போது பச்சை நிற லோ நெக் உடை அணிந்து போட்டோ சூட் ஒன்றை நடத்தி அதை வெளியிட்டுள்ளார். வழக்கத்திற்கு மாறாக முழு உடை அணிந்து இவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement