• Apr 28 2024

கறுப்பு உடையில் கவர்ச்சியை அள்ளி வீசும் ராகுல் ப்ரீத் சிங்.... நாள் முழுவதும் பார்த்துக்கிட்டு இருக்கலாம் போலவே தோணுதே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் பலராலும் அறியப்பட்ட பெண் நட்ஷத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இவர் செல்வராகவனின் '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் கன்னட மொழிபெயர்ப்பான 'கில்லி' படத்தில் நாயகியாக அறிமுகமானார். 


பின்னர் இவரின் முதல் தமிழ் படமாக 'தடையறத்தாக்க' அமைந்திருக்கின்றது. அதனைத் தொடர்ந்து 'புத்தகம்' உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆன ராகுல் ப்ரீத் சிங், 'என்னமோ ஏதோ' என்னும் படத்தில் நித்யாவாக நடித்திருந்தார்

தமிழில் மூன்று படங்களில் நடித்திருந்த போதிலும் போதுமான வரவேற்பு கிடைக்காத காரணத்தால் ஹிந்தி, தெலுங்கு என பிற மொழிகளுக்கு தாவிய ராகுல் ப்ரீத் சிங் அங்கு முன்னணி நாயகிகளில் ஒருவராக உள்ளார். அதுமட்டுமல்லாது தெலுங்கில் 'ப்ரூஸ்லீ, ஸ்பைடர்' போன்ற ஹிட் படங்களில் நடித்திருக்கின்றார்.


இப்படங்களில் மகேஷ்பாபு நாயகனாக நடித்த 'ஸ்பைடர்' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. இதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் ராகுல் ப்ரீத் சிங்.

இதனையடுத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் 'தேவ்' படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டார் ராகுல் ப்ரீத் சிங்.

பின்னர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி இருந்த 'என் ஜி கே' படத்தில் இரண்டாவது நாயகியாக தோன்றி மாஸ் காட்டியிருந்தார். பின்னர் மீண்டும் தெலுங்கு மொழிப் படங்களுக்கு திரும்பிய இவர் பாலிவுட்டிலும் பிரபலமாக நாயகியாக இருந்து வருகிறார்.

இவ்வாறு பல மொழிப் படங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்ற ராகுல் ப்ரீத் சிங் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். இதில் இவரது கவர்ச்சிப் புகைப்படங்களுக்கு ரசிகர்களுக்கு குறைவே இல்லை. 


அந்த வகையில் தற்போதும் கருப்பு நிற உடையணிந்து கவர்ச்சியாகப் போஸ் கொடுத்துப் புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார். இப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement