• May 12 2024

மார்க் ஆண்டனி படத்தில் விஷால் இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றாரா?- வெளியாகிய லேட்டஸ்ட் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்  உருவாகி வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தில் கதாநாயகனாக விஷால் நடித்து வருகின்றார்.தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் Pan Indian  திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர் வினோத்குமார் திட்டமிட்டிருக்கிறார்.

இதற்கான படப்பிடிப்பு சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் வினோத் குமார் தெரிவித்திருக்கிறார்.அத்துடன் இந்த திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு இரண்டு விதமான தோற்றங்கள் இருக்கும் என்றும், அது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும் எனவும் கூறியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

அத்தோடு சமீபகாலமாக விஷால் நடிப்பில் வெளியாகிய படங்கள் எதுவும் ரசிகர்களைக் கவராது இருக்கும் நிலையில் இப்படமாவது சூப்பர் ஹிட்டாக அமைய லேண்டும் என அவரது ரசிகர்கள் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement