• Sep 27 2023

அர்ஜுனுடன் சேர்ந்து சொத்தை அபகரித்த ராகினி- கோபத்தில் கொந்தளித்த நடேசன்- கலங்கி நிற்கும் கார்த்திக்- Thamizhum Saraswathiyum Serial

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அர்ஜுன் சொத்தெல்லாம் ராகினி பேர்ல மாத்தியாச்சு என்பது புரியலையா உங்களுக்கு என்று சொல்லி விட்டு ராகினியின் பெயருக்கு மாத்திவிட்ட டொக்கிடிமென்ட் எல்லாவற்றையும் காட்டுகின்றார். இதைப் பார்த்த கோதை அதிர்ச்சியடைகின்றார். அப்போது அர்ஜுன் நிங்க எல்லோரும் உங்க பையன் புது கம்பெனி வாங்கின சந்தோஷத்தில் இருந்தீங்க அதனால தான் இதை கவனிக்கல என்று அதிர்ச்சி கொடுக்கின்றார்.“


அப்போது நடேசன் அர்ஜுனை அடிக்கப் போக ராகினி திட்டுகின்றார். மேலும் நீங்க உங்க புருஷனை எப்பவாவது விட்டுக் கொடுத்து பேசியிருக்கிறீங்களா, அதே மாதிரி தான் என்னால என் புருஷனை விட்டுக் கொடுக்க முடியாது, உங்களால் அவங்க குடும்பத்தில இருந்து இரண்டு உயிர் போயிருக்கு அவங்க பண்ணினது சரி தான்.

இந்த சொத்தை மாற்றிய விஷயமும் தனக்கு தெரியும் என்று சொல்லி ராகினி அதிர்ச்சி கொடுக்கின்றார்.அப்பேது அர்ஜுன் உன்னை நம்பினதுக்கு இப்பிடி ஏமாத்திட்டியேடா என்று திட்டுகின்றார். அதற்கு அர்ஜுன் உன்னால தான் நான் இந்த வீட்டுக்கு வந்தேன். அந்த நன்றிக் கடனுக்காக தான் நீ அடிக்கும் போது பேசாமல் இருக்கிறேன். அதுக்காக ஒரே இப்பிடித் தான் இரு்பேன் என்று கற்பனை பண்ணாத என்று திட்டுகின்றார்.


அப்போது ராகினி சொத்து என் பேர்ல இருந்தாலும் உங்களை யாரும் வெளில போகச் சொல்லலையே, நீங்களும் இங்க இருக்கலாம் என்று சொல்ல,கோதை இந்த நரிக் கூட்டத்தோட நாங்க வாழனும் என்று அவசியமல்லை. எங்களுக்கு இவனைப் பற்றி புரிஞ்ச மாதிரி உனக்கும் ஒரு நாள் புரியும். அப்போ நீயும் தனி மரமா நிற்ப, உனக்கு நாங்க தான் துணையாக இருக்கனும் என்பதை மறந்திடாத என்று சொல்லி விட்டுச் செல்கின்றார்.


மேலும் கோதையின் பின்னாலேயே எல்லோரும் செல்ல சரஸ்வதி அர்ஜுனைத் திட்டி விட்டுச் செல்கின்றார். தொடர்ந்து எல்லோரும் கோவிலில் இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்கின்றனர். அர்ஜுன் செய்ததை நினைத்து கார்த்திக் வசுவிடம் புலம்பிக் கொண்டிருக்கின்றார்.அப்போது சரஸ்வதி வாங்க எல்லோரும் வீட்டுக்கு போகலாம் என்று அழைக்க கோதை எழும்பி போய் சாமி கும்பிடுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement