• May 07 2024

ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுத்த பாக்கியா... கோபியை முறைத்துப் பார்க்கும் ராதிகா... 'பாக்கியலட்சுமி' ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலிலும் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் இருக்கின்றது. அந்த வகையில் இந்த சீரியலில் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


அதில் ஈஸ்வரி பாக்கியாவிடம் கோபிக்கு காப்பி கொடுக்கிறீயா எனக் கேட்கின்றார். அதற்கு பாக்கியா என்னால முடியாது அத்தை என கூறி மறுப்புத் தெரிவிக்கின்றார். பின்னர் ஈஸ்வரி இனியாவிடம் சென்று இதைக் கொண்டு போய் உங்க அப்பாகிட்ட கொடுத்திட்டு வா எனக் கூறுகின்றார்.

இனியாவும் காப்பி எடுத்துக் கொண்டு போகையில் ராதிகா அதனை வாங்க முற்படுகின்றார். அதற்கு இனியா "உங்களுக்கு இல்லை அது அப்பாக்கு" எனக் கூறி சென்று கோபியிடம் காப்பியைக் கொடுக்கின்றார். 


பிறகு கோபி ரசித்து ருசித்து காப்பியை குடிக்க போக ராதிகா அதை தட்டி விட்டு அதிர்ச்சி கொடுக்கிறார். கோபியும் பதிலுக்கு முறைத்துப் பார்க்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement