• May 18 2024

அச்சு அசல் ஷிவானி நாராயணன் போல இருக்கும் குயின்சி- ஆமாம்ல இதுவரை யாரும் யோசிக்கவே இல்லையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. தங்களது குரலை ஸ்ட்ராங்கா சொல்லணும், சைலன்ட்டா இருக்கக் கூடாது என ஒவ்வொரு போட்டியாளர்களும் பக்கா பிளான் உடன் விளையாடி வருகின்றனர்.

மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஜிபி முத்துவை அமுதவாணன் உள்ளிட்டோர் வேண்டுமென்றே வம்பிழுத்து விளையாடி வருகின்றனர்.இது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.


மேலும் கடந்த 5 சீசனை விட, இந்த முறை மிகவும் வித்தியாசமாக உள்ளது. குறிப்பாக வந்த முதல் நாளே டாஸ்க் வைத்து நான்கு பேரை வீட்டிற்கு வெளியே அனுப்பினார் பிக்பாஸ். அவர்கள் நான்கு பேரும் இந்த முறை நேரடியாக நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

இந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றி வரும் முக்கிய போட்டியாளர் தான் குயின்சி.இவருடைய பேச்சு மற்றும் நடவடிக்கைகள் என்பன ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது. இதனால் ரசிகர்கள் பலரும் இவர் பிக்பாஸ் சீசன் 4  ஷிவானி போல இருக்கின்றாரே எனக் கூறி வருகின்றனர்.

மேலும் குயின்சியுடன் அசல் செய்யும் சேட்டைகளும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது. இவர்கள் இனி வரும் நாட்களில் நண்பர்களாகத் தான் இருப்பார்களா என ரசிகர்கள் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement