• May 18 2024

தனது குழந்தையின் புகைப்படத்தை முதன் முறையாகப் பதிவிட்ட ப்ரியங்கா சோப்ரா- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ப்ரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர்.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து பிரபல்யமான இவர் கடந்த 2018ஆம் ஆண்டு தனது காதலனான நிக் ஜோனஸை திருமணம் செய்த கொண்டார்.

அமெரிக்கா பாடகரான நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது சிறியவர் ஆவார். அத்தோடு ப்ரியங்கா அண்மையில் வாடகைத் தாய் மூலம் ஒரு பெண் குழந்தையையும் பெற்றுள்ளார்.

அத்தோடு இவர்கள் தற்பொழுது தங்கள் குழந்தைக்கு மால்டி மேரி சோப்ரா ஜோனாஸ் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement