• May 19 2024

44வயதாகியும் திருமணமாகாத பிரேம்ஜி.. 'காதலர் தினத்தில் திடீர் ப்ரோபோஸ்.. யாருக்கு தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் பிரேம்ஜி. இவர் 1980 மற்றும் 90களில் பிரபல இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞராக வலம் வந்த கங்கை அமரனின் இளைய மகன் ஆவார். 


பிரேம்ஜி நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பிரபல இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். அந்தவகையில் தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதாவது கடைசியாக மன்மத லீலை என்ற படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார்.


43 வயதான பிரேம்ஜிக்கு இதுவரை காலமும் திருமணம் ஆகவில்லை. இதனால் தனது சமூக வலைதள பக்கத்தில் தான் ஒரு முரட்டு சிங்கிள் என அடிக்கடி பதிவிட்டு வருகிறார் பிரேம்ஜி. இருப்பினும் அவர் பாடகி வினைதா என்பவருடன் காதலில் இருக்கிறார் என தொடர்ந்து சில காலம் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அதை அவர் மறுத்தார்.


இந்நிலையில் தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு பிரேம்ஜி ட்விட்டரில் போட்டிருக்கும் பதிவு ஒன்று படு வைரல் ஆகி இருக்கிறது. அதாவது காதலர் தினத்தில் ப்ரொபோஸ் செய்வது போன்ற ஒரு வீடியோவை பிரேம்ஜி அமரன் வெளியிட்டு இருக்கிறார். அதில் 'உன்னை விடவே மாட்டேன்' என அவர் மது பாட்டிலை பார்த்து தான் ப்ரொபோஸ் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தது.


Advertisement

Advertisement