• May 18 2024

பிரபாஸின் கல்கி படத்தின் முதல் கிளிம்ஸ் வீடியோ- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள படம் தான் கல்கி 2898 ஏடி. நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் அட்டகாசமான முதல் க்ளிம்ஸ் அமெரிக்காவின் காமிக் கானில் நள்ளிரவில் வெளியானது.

பகவான் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக சொல்லப்படும் கல்கி அவதாரத்தையே நடிகர் பிரபாஸ் தற்போது எடுத்துள்ளார். ஏற்கனவே ப்ராஜெக்ட் கே டைட்டிலுக்கான அர்த்தமாக கல்கி இருக்கும் என கெஸ் பண்ணது போல அதே டைட்டிலை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது.

தற்போது வெளியாகி உள்ள முதல் க்ளிம்ஸில் சூப்பர் ஹீரோவாக பிரபாஸ் கெத்தாக காட்சியளிக்கிறார். தீபிகா படுகோன் போராளியாக வருகிறார். ஒரு இன மக்களை 2898ம் ஆண்டு அடிமைப்படுத்து ஆள்கிறது ஒரு மோசமான தலைவனை கொண்ட கூட்டம்.

 நடிகர் பசுபதி அப்பாவி ஜனங்களின் தலைவனாக நடித்துள்ளார். அவர்களை காப்பாற்ற அவதார புருஷராகவோ அல்லது சூப்பர் ஹீரோ கல்கியாகவோ வருகிறார் பிரபாஸ் என்கிற விதத்தில் இந்த முதல் க்ளிம்ஸ் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement