• May 19 2024

சைமா விருதை தமதாக்கிக் கொண்ட இசை துறையைச் சேர்ந்த பிரபல கலைஞர்கள்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாத் துறையில் சாதனை படைத்த நடிகர் ,நடிகைகள், தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என பல்துறை பட்ட கலைஞர்களை கௌரவிப்பதற்காக சைமா விருது வழங்கும் விழா நடைபெற்று வருகின்றது.

இவ்விழாவில் சினிமா துறையைச் சேர்ந்த அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்ததுடன், சாதனை படைத்த கலைஞர்களுக்கு பல்வேறுபட்ட விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளன 

அந்த வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகி தீ ஆகியோருக்கு சைமாவினால்  விருது வழங்கி கவுரவிக்கப் பட்டுள்ளது. இது குறித்த தகவலை சந்தோஷின் மனைவி மீனாட்சி சமூக வலைத்தளங்களில் விருது பெற்ற புகைப்படத்தை பகிர்ந்ததுடன் மேலும் அவர் வாழ்த்தி தனது பதிவை பகிர்ந்துள்ளார். இப்பதிவில் அவர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் தனுசை  கௌரவித்து அவர்களுக்கு தமது நன்றியை பகிர்ந்துள்ளார்.

 


Advertisement

Advertisement