• May 18 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி நடிக்கும் வந்தியத்தேவன் போஸ்டர் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து வருகின்றார் இயக்குநர் மணிரத்னம். இப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான கார்த்தி விக்ரம் த்ரிஷா ஐஸ்வர்யா ஜெயம்ரவி எனப் பல பிரபலங்கள் பலரும் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் முதல் பாகம் ரிலீசிற்கு தயாராகி வருகிறது. படத்தின் ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது. இப்படம் ஜுலை மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

தஞ்சையில் டீசர் ரிலீஸ் விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டீசர் ரிலீஸ் தள்ளி போவதாக மற்றொரு தகவலும் பரவியது. சமீபத்தில், வருகிறான் சோழன் என்ற கேப்ஷனுடன் பொன்னியின் செல்வன் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. போர்க்களத்தில் சோழர்களின் கொடி பட்டொளி வீசி பறப்பதை போல் இந்த போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது.

அத்தோடு, சாகசம் நிறைந்த வாரத்திற்கு தயாராகுங்கள் எனவும் படக்குழுவினர் குறிப்பிட்டிருந்தனர். இப்படத்தின் முதல் பாகம் 5 மொழிகளில் ரிலீசாக உள்ளதால் மோஷன் போஸ்டரும் 5 மொழிகளில் வெளியிடப்பட்டது. இதனால் இந்த வாரம் பொன்னியின் செல்வன் டீசர் வெளியாக போகிறதா என ரசிகர்கள் ஆர்வமாக ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் நேற்று, படத்தில் விக்ரம் நடிக்கும் ஆதித்ய சோழன் கேரக்டரின் மாஸான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சோழ பட்டத்து இளவரசன்…மாபெரும் போர்வீரன்…காட்டுப்புலி…ஆதித்ய கரிகாலன் என்ற கேப்ஷனுடன் போர்ப்படைகள் சுழ குதிரை மீது அமர்ந்து வரும் விக்ரமின் போஸ்டரை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வெளியிட்டுள்ளன

விக்ரமின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கார்த்தி நடிக்கும் வந்தியத்தேவன் போஸ்டரை எப்போ வெளியிடுவீங்க என ஆர்வமாக கேட்டனர். ரசிகர்கள் பல நாட்களாக ஆர்வமாக கேட்டு வந்த வந்தியத் தேவன் கேரக்டரில் நடித்துள்ள கார்த்தியின் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ராஜ்யம் இல்லா இளவரசன்..உளவாளி..கைதேர்ந்த சாகசக்காரன்…இதோ வந்துவிட்டான் வந்தியத்தேவன் என்ற கேப்ஷனுடன் கார்த்தியின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்தி கம்பீரமாக குதிரை மீது போஸ் கொடுக்கும் போஸ்டருக்கு லைக்குகள் குவிந்து வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement