• Jan 19 2025

பிக் பாஸ் வீட்டில் கோமாளி ஆக்கப்படும் அர்ச்சனா! இடையில் சொம்பு தூக்கும் மாயா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், அர்ச்சனா என்னோட இன்னும் கோவமாகவா இருக்கிறாங்க என்று  விசித்திரா புலம்பியுள்ளார். அத்துடன், உள்ள ஒன்றும் வெளிய ஒன்று வைச்சி கதைக்கிறவங்க தான் விசித்திரா என்று உண்மையை போட்டு உடைத்துள்ளார் அர்ச்சனா.


அதன்படி,  மாயா , அர்ச்சனா ,விசித்திரா ,பூர்ணிமா பேசி கொண்டிருந்தனர். விசித்திராவும் அர்ச்சனாவும் தான் ஆரம்பத்திலேயே நல்ல ஒற்றுமையாக இருந்து வந்தார்கள். எனினும், தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சரியான சண்டை போய்ட்டு இருக்கு. இதன் காரணமாக மாயா , பூர்ணிமா, விசித்திரா ஒரு கட்சியாகிட்டாங்க . 


இத்தனை நாளும் மனசில ஒன்று வெளிய ஒன்று வைச்சி தான் விசித்திரா என்னோட பழகி இருக்காங்க போல, நான் மாற மாட்டேன் ஒரே மாறி தான் இருப்பன் என்று அர்ச்சனா மாயாவுக்கு சொல்லுகிறார்.


அதற்கு மாயா, உங்கள வந்து அவங்க கட்டி பிடிக்கிறாங்க , கொஞ்சிறாங்க என்றால் உங்கள பிடிக்காம இல்லை அவங்களுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். இப்ப கூட என்னட்ட கேக்கிறாங்க நான் அர்ச்சனாவோட போய்ட்டு கதைக்கவா? அர்ச்சனா இன்னும் என் மேல கோவமாவ இருக்கிறாங்க? இப்படி உங்க மேல அக்கறையா தான் இருங்காங்க என்பது போல அர்ச்சனாவுக்கு மாயா சொல்லுகிறார். . 

இதேவேளை, ஆரம்பத்தில் அர்ச்சனாவும் , விசித்திராவும் அம்மா, மகள் போல இருவரும் ஒன்றிணைந்து காணப்பட்டனர். எனினும் தற்போது இருவரும் முட்டி மோதி சண்டையிடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement