தமிழ் சினிமாவில் இசை மூலம் ரசிகர்களின் இதயங்களை எளிதில் கவர்ந்த கவிஞர்களில் ஒருவர் விவேகா. சமீபத்தில், இவர் ஒரு பேட்டியில் அஜித் குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

கவிஞர் விவேகா அதன்போது, “அஜித் சார் நான் எழுதின பாடல்களை ரொம்ப ரசிச்சு இருக்கார். அவர் படத்துல எழுதின நிறைய பாடல்களைப் பாராட்டி இருக்கார்.” என்று கூறியிருந்தார். இது அஜித் ரசிகர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகவும் உற்சாகமான செய்தியாக அமைந்திருந்தது.

அவர் மேலும்," வீரம் படத்துல எழுதின " ரத கஜ துரக" பாடலுக்கு என்னை கட்டிப் பிடிச்சுப் பாராட்டி என்ர மனைவி ஷாலினியோட ரிங்டோனே இதுதான் சார்னு சொன்னார். அந்தப் பாடல் அஜித் சாருக்கு ரொம்ப பிடிக்கும்." எனவும் தெரிவித்திருந்தார் விவேகா.
அஜித், action hero எனப் பெரும்பாலும் தெரியபட்டு வந்தாலும், அவரது படங்களில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களுக்கு மிக முக்கியமான அனுபவமாக இருக்கும்.
கவிஞர் விவேகா குறிப்பிட்டது போல, அவர் எழுதிய பாடல்களில் குறிப்பாக “வீரம்” படத்தில் உள்ள “ரத கஜ துரக” பாடல் அஜித்துக்கு மிகவும் பிடித்ததாகும். இந்தச் சம்பவம் தமிழ் சினிமாவில் நடிகர்–கவிஞர் இடையேயான உறவை வெளிப்படுத்துகிறது.
Listen News!