• Jan 18 2025

எமோஷனலா விளையாடாதீங்க ப்ளீஸ்..!! ஹவுஸ்மேட்ஸ்க்கு வந்து குவிந்த மொட்டைக் கடதாசிகள்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 32 வது தினத்தை கடக்கவுள்ளது. இதை தொடர்ந்து இன்றைய தினம் இரண்டாவது ப்ரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்..

அதன்படி பிக் பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்க்கு புதிய டாஸ்க் ஒன்று வைக்கப்படுகின்றது. அதில் மொட்டை கடிதாசி.. தைரியமா எழுதுங்க.. சொல்ல முடியாம.. சொல்லணும்னு நினைக்கிற விஷயங்கள தயக்கம் இல்லாமல் எழுதுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

d_i_a

இவ்வாறு பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்கின் படியே ஆரம்பத்தில் தீபக், வணக்கம் தங்கங்களா.. என ரஞ்சித்தின் டயலாக்கை பேசுகின்றார். அதன் பின்பு முத்துக்குமரன் இது உங்களுக்கான லெட்டர் என்று மஞ்சரி வாசிக்க, வெறும் பேச்சை வைச்சு மட்டும் சாதிக்க முடியாது என்று வர்ஷினி சொல்லுகின்றார்.


இதை தொடர்ந்து ஜாக்குலின் எடுத்த லெட்டரில் ஹாய் சுனிதா.. நீங்க என்ன தான் சிரிச்சு பேசினாலும் ஏதோ உறுத்துது என வாசிக்கின்றார். மேலும் மஞ்சரி உங்களுக்கு கொஞ்சம் அறிவு இருக்கு என்று நினைத்தேன் எனவும்,  விஷால் ஆனந்திக்கு வந்த லெட்டரில் உங்களுடைய எமோஷனலை மறைத்து விட்டு பேக்கா விளையாடதீங்க எனவும் வாசித்து முடிக்கிறார்கள்.

இவ்வாறு தற்போது வெளியான ப்ரோமோவின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டுக்குள் மொட்டைக் கடதாசி போடப்படுகின்றது. இதை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்ட ஹவுஸ்மேட்ஸ் சக போட்டியாளர்களை போட்டு தாக்கி வருகின்றார்கள். எனவே இதிலும் எதுவும் கலவரம் நிகழுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

Advertisement

Advertisement