• Dec 07 2024

ஆண்டவர் பிறந்தநாள் பரிசு இதோ! அனலாய் வந்த தக் லைப் டீசர்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குனர் மணிரத்னமும் நடிகர் கமலஹாசனும் இணைந்து தற்போது தக் லைப் திரைப்படத்தினை உருவாக்கி வருகிறார்கள்.  இன்று கமலஹாசனின் பிறந்தநாளினை முன்னிட்டு தக் லைப் திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2024 இல் சென்னையில் தொடங்கியது, கூடுதல் பகுதிகள் புதுதில்லியில் படமாக்கப்பட்டன.


 பல மாத தயாரிப்புக்குப் பிறகு, படம் செப்டம்பர் 2024 இல் அதன் படப்பிடிப்பை முடித்தது. இந்த திட்டத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5ம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

d_i_a


தக் லைஃப் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், அபிராம் மற்றும் நாசர் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இன்று இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement