• May 19 2024

ஒரு குழந்தைக்குத் தாயாக மாறியும்.. கவர்ச்சியைக் கைவிடாத காஜல் அகர்வால்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

2004ல் ஹோ கயா நா என்ற பாலிவுட் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் 2007ல் லட்சுமி கல்யாணம் என்ற படத்தில் என்ட்ரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து பின்னர் தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்னும் படத்தில் அறிமுகமானார்.


இப்படத்தினைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என தன்னை பிசியாக்கிக் கொண்ட காஜல் அகர்வாலுக்கு ராம்சரணுடன் நடித்த மகதீரா திரைப்படம் சிறந்த நடிகையாக அறிமுகப்படுத்தியது. இதனால் தமிழில் விஜய் விஷால் தனுஷ் ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.


இதையடுத்து கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். இவர்களுக்கு நீல் என்ற ஆண்குழந்தை உண்டு. குழந்தைப் பிறந்தும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாத வகையில் காஜல் அகர்வால் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.


அந்தவகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement