• May 12 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்திற்கு இந்தளவு பெரிய மகனா... நம்பவே முடியல... வெளியான புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவரே சுஜிதா. இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஆவார். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளிலும் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் என்பவற்றில் பல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.



மேலும் மலையாளத்தில் தொலைக்காட்சி தொடரில் நடிக்க தொடங்கிய இவர் தற்போது 40 இற்கும் அதிகமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற  தொடரில் நடித்து வருகின்றார். அதுமட்டுமன்றி கன்னடத்திலும் இதே தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அண்ணி தனம் ரோலில் நடித்து அசத்தி வருகிறார் சுஜிதா. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற இந்தக் கூட்டு குடும்பத் தொடரில் சுஜிதாவின் ரோலுக்கு அதிகம் முக்கியத்துவம் இருந்து வருகிறது.



இவர் சீரியல் நடிகையாக மட்டுமன்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் படங்களிலும் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் விளம்பர விடீயோக்களை தயாரிக்கும் தனுஷ் என்பவரை திருமணம் புரிந்து சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு அழகான மகன் ஒருவரும் உண்டு.  சீரியலில் மட்டுமன்றி இன்ஸ்டாகிராமிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சுஜிதா அவரது புடைப்படங்ளை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 



அந்தவகையில் அவர் தற்போது தனது மகன் போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் தமது லக்ஸ்களை அள்ளிக் குவித்து வருவதோடு "உங்களுக்கு இவ்ளோ பெரிய மகனா" எனக் கேட்டுப் பலரும் தமது கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றார்கள்.




Advertisement

Advertisement

Advertisement