• Apr 28 2024

அச்சு அசல் ராஷ்மிகாவை போலவே இருக்கும் அவரது தங்கை... ரொம்ப அழகாக இருக்காங்களே.. வெளியான குடும்ப புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் சமீபகாலமாக இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர். இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த 'கீதா கோவிந்தம்' என்ற திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.


இப்படத்தில் இவர் விஜய்தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இன்று வரைக்கும் இந்த ஜோடியை தென்னிந்திய சினிமா கொண்டாடிய வண்ணம் தான் இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் ப்ரியா என்ற கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டிருக்கின்றார்.



அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'சுல்தான்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தார் ராஷ்மிகா. அதுமட்டுமல்லாது தற்போது விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'வாரிசு' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் வருகிற 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.



இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது சுமன் மந்தனா-மதன் மந்தனா எனும் தம்பதிக்கு பிறந்த மூத்த பெண் தான் ராஷ்மிகா. மேலும் இவர்களுக்கு ஷிமம் மந்தனா எனும் இளைய மகளும் உள்ளார். ராஷ்மிகாவின் தங்கை அச்சு அசலாக ராஷ்மிகாவை போலவே இருக்கின்றார். இவ்வாறாக தனது அம்மா, அப்பா, தங்கை என இவர்கள் அனைவருடனும் இணைந்து குடும்பமாக அவர் எடுத்துக் கொண்ட புகைப்படமே தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement