• Jan 19 2025

பல் டாக்டர், ஸ்விம்மர், மிஸ் இந்தியா, பேட்மிண்டன் பிளேயர்.. ‘கோட்’ நடிகைக்கு இத்தனை பட்டமா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் நடிக்கும் நடிகை, நடிகையாக மட்டுமின்றி அவர் ஒரு பேட்மிட்டன் பிளேயர், மிஸ் இந்தியா, நீச்சல் சாதனையாளர் மற்றும் பல் டாக்டர் என தெரிய வந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மற்றும் பார்வதி ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர் என்பதும் நால்வருக்கும் சமமான கேரக்டர் இந்த படத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் சினேகா, லைலா, பார்வதி குறித்து ஏற்கனவே ரசிகர்கள் அறிந்தது என்றாலும் மீனாட்சி சவுத்ரி குறித்து சில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளதை அடுத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 



ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மீனாட்சி சவுத்ரி கடந்த 2018 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் என்றும், அது மட்டும் இன்றி மாநில அளவிலான நீச்சல் வீராங்கனை சாம்பியன்  என்பதும் அதேபோல் மாநில அளவில் பேட்மிண்டன் பிளேயர் என்பதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி மீனாட்சி சவுத்ரி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் பல் டாக்டர் ஆக பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே மிஸ் இந்தியா, பல் டாக்டர், நீச்சல் வீராங்கனை மற்றும் பேட்மிட்டன் வீராங்கனை என்ற நான்கு பெருமைகள் பெற்றுள்ள அவர் தற்போது நடிகையாகவும் மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement