• Oct 09 2024

bigg boss-season-7-இல் முக்கிய போட்டியாளராக களமிறங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்- அடடே இந்த நடிகரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி. தமிழ் ரசிகர்கள் மத்தியில் இதற்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த 6 சீசன்களாக வெற்றி நடை போட்டுள்ளது. இதனால் அடுத்து ஆரம்பமாகவுள்ள 7வது சீசனுக்கும் ரசிகர்கள் மத்தியில் அதி எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

இந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1 தொடங்கவிருக்கிறது. எனினும், இவர்கள்தான் போட்டியாளர்கள் என்னும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் கிடைக்கப்படவில்லை. எனினும், மற்ற சீசன்களை விட இந்த சீசன் பிக் பாஸ் முற்றிலும் மாறுபட்டு இருக்கப்போகிறது.


இந்த சீசனில் பப்லூ பிரித்விராஜ், ஜாக்குலின், மாகாபா ஆனந்த், பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, தர்ஷா குப்தா, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், செய்திவாசிப்பாளர் ரஞ்சித் என பல பேர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. இவர்களுள் கண்டிப்பாக அதிகப்படியான பேர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிகிறது.


இந்த நிலையில் இந்த முறை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிராக நடித்து வரும் குமரனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவல் அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement