• Jan 19 2025

மீனாவுக்கும் ராஜிக்கும் கண்டிஷன் போட்ட தங்கமயில்.. சப்போர்ட் பண்ணிய பாண்டியன் - கோமதி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் தங்கமயிலுக்கு அவரது அம்மா போன் செய்து வழக்கம் போல் சில தவறான அறிவுரைகளை கூறுகிறார்.

அதன் பின்னர் தங்கமயில் தனது கணவருக்கு போன் செய்து விதவிதமாக சமைத்து இருப்பதாகவும் தானே சாப்பாடு கொண்டு வருவதாகவும் கூறுகிறார். இதனை அடுத்து ராஜி தீவிர ஆலோசனையில் இருக்கும்போது கோமதி மற்றும் மீனா வந்து ’என்ன விஷயம்’ என்று கேட்க ’நான் வேலைக்கு போக போகிறேன், கதிர் மட்டும் தனியாக வேலை செய்து கொண்டிருக்கிறார்’ என்று கூற அதற்கு மீனா சப்போர்ட் செய்கிறார்.

’என்ன வேலைக்கு செல்லலாம் போகலாம்’ என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கும் போது கோமதி வீட்டில் இருந்தே செய்யும் வேலையாக பாரு’ என்று அறிவுரை கூறுகிறார். அப்போது தங்கமயில் அங்கே வந்து ’டியூஷன் எடுக்கலாம்’ என்று கூற ’அது நல்ல ஐடியாவாக இருக்கிறது’ என்று எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர்.

அப்போது ராஜி ’நான் மட்டும் தனியாக டியூஷன் எடுத்தால் எப்படி? என்னுடன் இன்னொருத்தர் சேர்ந்து இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று சொல்ல அப்போது தங்கமயில் இடம் ’நீங்களும் என்னுடன் சேர்ந்து டியூஷன் எடுங்கள், நீங்கள் தான் எம்ஏ ஆங்கிலம் படித்திருக்கிறீர்களே, பசங்களுக்கு ஆங்கிலம் பாடம் எடுங்கள்’ என்று சொல்ல திடீரென பதறிய தங்கமயில் ’என்னால் அதெல்லாம் முடியாது. எனக்கு அனுபவம் இல்லை என்று கூறி சமாளித்து திடீரென பேச்சை மாற்றும் வகையில் ’நீங்கள் என்ன, என்னை மயிலு என்று கூப்பிடுகிறீர்கள், நான் உங்களை விட மூத்தவள் எனவே இரண்டு பேருமே என்னை அக்கா என்று தான் கூப்பிட வேண்டும்’ என்று கண்டிஷன் போடுகிறார்.



அப்போது மீனா ’அக்கா’ என்ற வார்த்தையை பலமுறை பயன்படுத்தி கிண்டல் செய்யும் காட்சிகளும் உள்ளன.  தங்கமயில் சொன்னதை கோமதியும் ஆமோதித்து ’அவ தான் உங்களை விட மூத்தவ தானே, அக்கா என்று கூப்பிடுங்கள்’  என்று சப்போர்ட் செய்ய மீனாவும் ராஜியும் கடுப்பாகிறார்கள்.

இந்த நிலையில் தங்கமயில் சரவணனுக்கு சாப்பாடு எடுத்துச் செல்லும்போது கோமதி வேண்டாம் என்று சொன்னாலும் அவர் கேட்கவில்லை. அப்போது வரும் பாண்டியன் ’சரி போய் சாப்பாடு கொடுத்துட்டு வா, ஆனால் வெயிலில் நடந்து போக வேண்டாம், ஆட்டோவில் போ’ என்று ஆட்டோவிற்கு ஏற்பாடு செய்கிறார். தங்கமயில் சென்ற பின்னர், மீனா, ராஜியிடம் பாண்டியன் ’என்னைக்காவது உங்களுக்கு உங்க கணவன்களுக்கு சாப்பாடு எடுத்து செல்ல வேண்டும் என்ற யோசனை தோன்றியதா? இதுதான் வீட்டில் பார்த்து செய்து வைத்த கல்யாணத்திற்கும், காதல் கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம்’ என்று இருவரையும் குத்தி காட்டுகிறார். இதனை அடுத்து தங்கமயில் சரவணனுக்கு சாப்பாடு எடுத்துச் சென்று அவருக்கு பரிமாறும் காட்சிகளுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement