• Jan 19 2025

தயாரிப்பாளரிடமும் தனுஷிடமும் கெஞ்சி கூத்தாடிய விஜய்சேதுபதி? 50 லட்ச ரூபாய்க்கும் மேல் வெட்டி செலவு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடித்த அவரது ஐம்பதாவது திரைப்படமான ’மகாராஜா’ வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு உலகின் மிகப்பெரிய கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் விளம்பரம் செய்யப்பட்டது. இதற்காக 50 லட்சம் ரூபாய் செலவானதாகவும் இந்த செலவை கட்டாயப்படுத்தி விஜய் சேதுபதி தயாரிப்பாளரை செய்ய வைத்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் மட்டும் சூப்பர் ஹிட் ஆகி வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன. இந்த நிலையில் அவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் மற்றும் 50வது படமான ’மகாராஜா’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பிரமாண்டமாக செலவு செய்ய வேண்டும், தன்னுடைய 50வது படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளருக்கு அதிக செலவு இழுத்து விடுவதாக கூறப்படுகிறது.



துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் விளம்பரம் செய்ய வேண்டும் என்ற ஐடியாவே தயாரிப்பாளருக்கு இல்லாத நிலையில் விஜய் சேதுபதி தான் வற்புறுத்தி அதை செய்யச் சொன்னதாகவும் இதனால் 50 லட்சம் ரூபாய் தேவை இல்லாத செலவு தயாரிப்பாளருக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஒருவேளை இந்த படம் வெற்றி பெற்றால் விஜய் சேதுபதி தனக்கு இன்னொரு படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுப்பார் என்பதற்காக இந்த செலவை அவர் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜூன் 13ஆம் தேதி தனுஷின் ’ராயன்’ திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் தனது படத்திற்கு போட்டியே இல்லாமல் சோலோவாக ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக தனுஷிடம் கெஞ்சி கூத்தாடி விஜய் சேதுபதியும் இந்த படத்தின் தயாரிப்பாளரும் ’ராயன்’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்க சொன்னதாகவும் தனுஷும் ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இவ்வளவு முன்னேற்பாடுகள் செய்தும் விஜய் சேதுபதியின் 50-வது படமான ’மகாராஜா’ வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement