• Jan 19 2025

கதிர் திமிர் காட்டியதை நினைத்து சந்தோஷப்படும் பாண்டியன்.. கல்லுக்குள் இவ்வளவு ஈரமா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நேற்று தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் செலவுக்காக 6 ஆயிரம் ரூபாய் பணம் கதிர் கொடுத்ததும் அதை பார்த்து பாண்டியன் கோபப்படும் காட்சிகளுடன் முடிந்தது. இன்றைய எபிசோடில் கதிரை அவரது அம்மா கோமதி கண்டிக்கிறார். என்ன இருந்தாலும் நீ செய்வது தப்பு என்று சொல்ல, கதிர் அப்போது ’எனக்கும் என்னுடைய மனைவிக்கும் சேர்த்து நான் காசு கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை’ என்று கூறி கூறுகிறார்.

அப்போது பாண்டியன் இரண்டு பேர் தங்கி சாப்பிட எவ்வளவு செலவாகும் என்று கோமதியிடம் கேட்க கோமதி அதற்கு பதில் கூறவில்லை. ஆனால் முந்திரிக்கொட்டை போல் தங்கமயில் அதற்கு 8000 முதல் 10,000 வரை  ஆகும் என்று கூற, அதன்பின் பாண்டியன் 6000  ருபாய் போதாது என்று பாண்டியன் கிண்டலாக கூறுகிறார். இதை அடுத்து ’இந்த முறை 6000 ரூபாய் தருகிறேன், ஆனால் அடுத்த முறை கண்டிப்பாக நீங்கள் கேட்ட பணத்தை தந்து விடுகிறேன்’ என்று கதிர் கூற பாண்டியன் ஆத்திரத்துடன் வெளியே கிளம்புகிறார்.

 இதனை அடுத்து கதிரை கோமதி திட்டுகிறார். அப்போது கதிர் ’என்னுடைய இடத்தில் அப்பா இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார். நீங்களும் அப்பாவும் திருமணம் செய்து கொண்டு வந்த போது உங்கள் வீட்டார் உங்களுக்கு செலவு செய்தால் அப்பா ஒப்புக்கொள்வாரா, அப்படிப்பட்ட அப்பாவின் பையன் நானும் அப்படித்தான் இருப்பேன்’ என்று கூற கோமதி மறுபேச்சு  பேசாமல் வெளியேறி விடுகிறார்.



இது குறித்து கோமதி மீனாவிடம் புலம்ப, மீனாவும் கதிர் செய்தது சரிதான், அவர் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று கூற அப்போது சந்தோஷமாக ராஜி வருகிறார். தனது கணவன் தனக்கு ஆதரவாக பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் சிறுவயதில் நான் கதிரை என்னவோ போல் நினைத்தேன், ஆனால் இப்போதுதான் அவரும் சென்சிபிள் என்று தெரிய வருகிறது என்று கூற கோமதி செல்லமாக கோபப்படுகிறார்.

அப்போது அங்கு வரும் தங்கமயில் ’கதிர் செய்தது ரொம்ப தப்பு, என் அப்பாவிடம் நான் எதிர்த்து கூட பேச மாட்டேன்’ என்று கூற அதற்கு மீனா ’ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த வீட்டை பொருத்தவரை 10 நாள் சண்டை போடுவோம், 11வது நாள் கூடிடுவோம்’ என்று கூற, கோமதியும் ’கதிர் சென்றது தவறு இல்லை’ என்று கூறிவிட்டு செல்கிறார். இதனால் தங்கமயிலுக்கு செம பல்பு கிடைக்கிறது.

இந்த நிலையில் பாண்டியன் தனது கடைக்கு வந்து கதிரை திட்டுகிறார். அவரது மாமாவிடம் புலம்பி கொண்டிருக்கும் நிலையில் செந்தில் மற்றும் பழனி ஆகிய இருவரும் வெளியே சென்ற பின்னர் மாமாவிடம் பாண்டியன் ‘கதிர் செஞ்சது சரிதான், அவனை பார்க்குபோது என்னை நானே இருப்பது போல் உணர்ந்தேன், அந்த திமிரு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, கண்டிப்பாக கதிர் ஒரு நல்ல நிலைக்கு வருவான் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்று சொல்ல ’நீ வளர்த்த பையன்கள் யாருமே சோடை போக மாட்டார்கள், எல்லோருமே நன்றாக இருப்பார்கள்’ என்று அவரது மாமா கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது. பாண்டியன் மனது வெளியே கல் போன்று இருந்தாலும், அந்த கல்லுக்குள்ளும் பாசம் என்ற ஈரம் உள்ளது என்பது இன்றைய எபிசோடில் இருந்து தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement