• Oct 09 2024

சண்டை போட்ட கோபியை போலீஸில் பிடிச்சுக் கொடுத்த பாக்கியா- வெட்கப்பட்டு சந்தோஷத்தில் இருக்கும் பழனிச்சாமி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியாவுக்கு இங்கிலீஸ் வகுப்பில் வைத்து பழனிச்சாமி ப்ரபோஸ் செய்வதை கோபி பார்த்து விட்டு வந்து நிற்கின்றார். அந்த நேரம் பழனிச்சாமி வர அவரிடம் உங்க வயசில இதெல்லாம் தேவையா, அதில வெட்கம் வேற, மேல நீங்க அடிச்ச கூத்தெல்லாம் பார்த்திட்டு தான் வாரேன் இதோட நிறுத்திக்கோங்க என்று சொல்கின்றார்.


அப்போது பழனிச்சாமி மேல நடந்ததை வந்து பார்த்தீங்களா நீங்க, அது ஒரு டாஸ்க்குங்க அதான் பண்ணிட்டு இருந்தோம் என்று சொல்கின்றார். ஆனால் இதைக் கேட்ட கோபி, பழனிச்சாமியை தாறுமாறாகத் திட்டி விட்டு அங்கிருந்து நகர்கின்றார். இதனை அடுத்து பாக்கியா வீதியில் பைக்கில் வரும் போது பாக்கியாவின் பைக்கில் மோதுவது போல கோபி காரை நிறுத்துகின்றார்.

பின்னர் கீழே இறங்கி பாக்கியாவிடம், உனக்கு அசிங்கமா இல்லையா படிக்கிறேன் என்ற பேர்ல லாம்போஸ்ட் கூட ஊர் சுத்திட்டு திரியிற உடம்பு முழுக்க திமிர் கூடிட்டு என்று பாக்கியாவைத் திட்ட ஒழுக்கத்தை பற்றி நீங்க பேசாதீங்க என்னைப் பற்றி கேள்வி கேட்க நீங்க யார் என்று பாக்கியாவும் பதிலுக்கு பதில் பேசுகின்றார்.

இவ்வாறு இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது இதனை வீதியில் நின்று எல்லோரும் பார்க்கின்றனர். பழனிச்சாமியும் லோபிகாவுடன் நின்று பார்க்கின்றார்.இதனை அடுத்து அந்த இடத்திற்கு போலீஸ் வந்து என்ன பிரச்சினை என்று கேட்க கோபி இவங்க என்னோட வைஃப் அதான் குடும்ப பிரச்சினை பற்றி பேசிட்டு இருக்கிறோம் என்று சொல்கின்றார்.


அப்போது பாக்கியா இந்த ஆளு யார் என்றே தெரியாது, தேவையில்லாம சண்டை போட்டிட்டு இருக்காரு என்று கோபியை மாட்டி விட போலீஸார் பாக்கியாவை அனுப்பிவிட்டு கோபியை எச்சரிக்கின்றனர்.அத்தோடு பார்க்க டீசன்டாக இருக்கிறீங்க என்றதால தான் மன்னிச்சு விடுறோம். உங்க அட்ரஸ்ஸை கொடுத்திட்டு போங்க என்று சொல்ல கோியும் அட்ரஸ்ஸை கொடுத்திட்டு பாக்கியாவை நினைத்து கோபப்படுகின்றார். இததுடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement