• Jan 19 2025

பிரச்சனையை சாதுரியமாய் கையாண்ட பாக்கியா.. செழியன், ஜெனிக்கு ரூமில் காத்திருந்த அதிர்ச்சி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், பாக்கியா, எழில், செழியன் ஆகிய மூவரும் வெளியே போக கிளம்ப, அங்கு சோபாவில் இருந்த ஈஸ்வரி, ராமமூர்த்தி, கோபி எங்கே போறீங்க என கேட்டதற்கு ஆளுக்கு ஒரு பதிலாக சொல்லி மாட்டிக் கொள்கிறார்கள்.

பிறகு பாக்கியா ரெஸ்டாரன்ட் போயிட்டு அதுக்கப்புறம் ஒரு இடத்துக்கு போவதாக சொல்ல, எழிலும் ஆர்ட் ஏஜென்சிக்கு போக போறோம் செழியன் ஐடியா கொடுக்கிறதாக சொன்னான் அதுக்காக செழியனையும் கூட்டிட்டு போறேன் என சொல்ல, கோபி செழியனிடம் உனக்கு வேலை இல்லையா? என்று கேட்க, அவன்  லீவு போட்டுட்டான் என்று செழியினை பேசவிடாமல் எழில் சமாளிக்கிறார். பிறகு ராமமூர்த்தி அதான் சொல்றாங்கல போயிட்டு வரட்டும் என்று சொல்ல, இவர்கள் ஒருவழியாக வெளியே  கிளம்பி வருகிறார்கள்.

அதன் பின் இவர்கள் மூவரும் வெளியே வர, செழியன் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டு வருகிறார்.


மறுபக்கம் ஜெனியை சர்ச்சுக்கு போகலாம் என்று சொல்லி மரியமும் கிளம்பி வருகிறார். இதன் போது ஜோசப் எங்கே போறீங்க என கேட்க, சர்ச்சுக்கு போயிட்டு வாரோம் என சொல்ல, திடீரென என்ன என்று அவரும் கேள்வி மேல கேள்வியா கேட்கிறார் ஜோசப். அதற்கு மரியம் எல்லாத்துக்குமே உங்க கிட்ட சொல்லி அனுமதி வாங்கிட்டு தான் போகணுமா? எனக் கோபப்படுகிறார். 

இதைத்தொடர்ந்து ஒரு வீட்டுக்கு வந்து ஜெனி மரியமும் இறங்க, சர்ச்சுக்குத் தானே போறோம் என்று சொன்னீங்க  இங்க எதுக்கு வந்திருக்கம் என்று ஜெனி கேள்வி கேட்கிறார். அதற்கு மரியம், கவிதா வீட்ல ஒரு சின்ன பிரச்சனை அதை பத்தி பேசிட்டு போகலாம் என்று சமாளிக்கிறார். அதன் பின் பாக்கியாவுக்கு போன் போட அவர் என்ன ஐஞ்சு நிமிஷத்துல வருவேன் என்று சொல்கிறார்.

அவர்களும் அங்கே வர செழியன் ஆர்ட் ஏஜென்சி என்று சொன்னீங்க ஒரு போர்ட்டு இல்ல ஒன்னும் இல்ல எனக் கேட்க,  இருவரும் செழியனுக்கு  திட்டுகிறார்கள். அதன் பிறகு ஜெனி ஃபீட் பண்ண ரூமுக்கு சென்ற நிலையில், செழியன் உள்ளே கூட்டி வந்து ஜெனி இருக்கும் ரூம்மில் தள்ளி விட்டு கதவை பூட்டுகிறார்கள்.

அதன்பின், மரியம்  எல்லாம் நல்லபடியாக நடக்குமா எனக் கேட்க, எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று பாக்கியாவும் பேசிக்கொள்கிறார்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement