• Oct 16 2024

சிஎஸ்கே வீரர் பத்திரனாவை காதலிக்கிறாரா ‘பாக்கியலட்சுமி’ நடிகை.. இலங்கை மருமகள் ஆவாரா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமான மதீரா பத்திரானாவை ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் அவரே இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை நேஹா. இவர் ஏற்கனவே ’பைரவி’ என்ற சீரியலில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’பிள்ளை நிலா’ ’வாணி ராணி’ உள்ளிட்ட ஒரு சில சீரியல்களை நடித்தார். குறிப்பாக ’வாணி ராணி’ சீரியலில் ராதிகாவின் மகள் தேனு என்ற கேரக்டரில் நடித்த நிலையில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்

இதனை அடுத்து சிபிராஜ் நடித்த ’ஜாக்சன் துரை’ என்ற படத்தில் நடித்த நேஹா, மீண்டும் தற்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று தரும் நிலையில் அவருக்கு என்ன ஒரு தனி ரசிகர் பட்டாளமே ஏற்பட்டுள்ளது



இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் இலங்கையை சேர்ந்த பத்திரனாவை நேஹா காதலிப்பதாகவும், விரைவில் அவர் இலங்கையின் மருமகள் ஆகப்போவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இது குறித்து கூறிய நேஹா, ’நான் பொதுவாக கிரிக்கெட் பார்ப்பதில்லை, எப்போதாவது பார்ப்பேன், அப்போதுதான் ஒரு முறை படப்பிடிப்பில் இருந்த போது கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தபோது, பத்திரானா குறித்து கேள்விப்பட்டேன். அவரது பௌலிங் எனக்கு பிடித்திருந்ததால் அவர் போட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸை நானும் ஷேர் செய்தேன்

இதனை வைத்து தான் நான் அவரை காதலிப்பதாக சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கிறது. முதலில் ஜாலியாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன், ஆனால் விஷயம் விபரீதம் ஆகி வருவதை அடுத்து விளக்கம் அளிக்கிறேன், உண்மையில் நான் பத்திரனாவை நேரில் பார்த்தது கூட கிடையாது, அவர் எப்படிப்பட்டவர் என்பதும் எனக்கு தெரியாது, நான் அவரை காதலிக்கவில்லை. ஏற்கனவே என்னுடைய வாழ்க்கையில் ஒரு காதல் தோல்வி இருந்ததால் இனிமேல் என்னுடைய வாழ்க்கையில் இன்னொரு காதல் இல்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement