• Apr 27 2024

ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடியா?.. லெஜண்ட் பட நடிகை வாங்கிய சம்பளம் -அதிர்ச்சியான ரசிகர்கள்..!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஊர்வசி ரவுத்தேலா. 2013ம் ஆண்டு வெளியான சிங் சாப் தி கிரேட் என்ற இந்தி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.


தொடர்ந்து பாக் ஜானி, சனம் ரே, காபில், ஹேட் ஸ்டோரி 4, வெர்ஜின் பானுப்ரியா போன்ற படங்களில் நடித்துள்ளார்.


தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். லெஜண்ட் சரவணன் விஞ்ஞானியாக நடித்த இப்படத்தில் ஊர்வசி ரவுத்தேலா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் நாசர், சுமன், பிரபு, விவேக், ரோபோ ஷங்கர், சச்சு,யோகி பாபு, மயில்சாமி, மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்திருந்தனர்


இத்திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து ஊர்வசி ரவுத்தேலாவுக்கு படவாய்ப்புகள் தேடி வந்தன. 


தொடர்ந்து பல படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் ஊர்வசி,தெலுங்கு படத்தின் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட 3 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.3 நிமிடம் வரும் அந்த பாடலுக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளமா அதெல்லாம் ரொம்ப ஓவருங்க என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement