• May 12 2024

KGF- 3 சர்ச்சைக்கு தயாரிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் KGF-2

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பான் – இந்தியா படமாக KGF-2 வெளிவந்தது.

மேலும் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம், தொடர்ந்து பல வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது.இது ரசிகர்களிடத்தே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் கே ஜி எப் 3ம் பாகம் அக்டோபர் மாதம் தொடங்குவதாக சில தகவல்கள் இணையத்தில் வர, தயாரிப்பாளரே தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

அத்தோடு அவர் கே ஜி எப் 3 இப்போதிக்கு தொடங்கவில்லை, அது வதந்தி தான், கண்டிப்பாக தொடங்கும் போது நாங்களே அறிவிப்போம் என கூறியுள்ளார்.

https://www.youtube.com/embed/htqI7txMkB8

Advertisement

Advertisement

Advertisement