• Oct 16 2024

மதுரையிலும் வேணாம் மலேசியாவிலும் இல்லைங்க-leo இசை வெளியீட்டு விழாவை இங்கையே நடத்துங்க- vijay கொடுத்த ஐடியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில், பட குழுவினர் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

இப்படத்தில்  விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதமேனன், ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளதாகவும் இவர்களைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், கதிர், மடோனா செபஸ்டின், ஜனனி போன்ற நடிகர்கள் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


'லியோ' படகுழுவினர் தற்போது இசை வெளியீட்டு விழாவை,அக்டோபர் 5 தேதி  மிகப் பிரம்மாண்டமாக மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி  இருந்தது.இருப்பினும் அங்கு தொடர் மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகின்றது.

அத்தோடு முதலில் மதுரையில் தான் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டிருந்தார்களாம்.அந்த பிளானும் தவிர்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்டதாம். இப்படியான நிலையில் லியோ இசை வெளியீட்டு விழா எங்கே எப்போது நடக்கும் என்பது தான் அனைவரது கேள்வியாகவும் இருக்கின்றது. 


அதன்படி தற்போது ஒரு வழியாக லியோ இசை வெளியீட்டு விழாவை சென்னையிலேயே நடத்த படக்குழு முடிவெடுத்துள்ளதாம். தளபதியும் இதற்கு ஓகே தெரிவித்துள்ளாராம். எனவே அநேகமாக அக்டோபர் ஐந்தாம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement